Thursday, April 27, 2017

தண்ணீர் - அசோகமித்திரன்


அசோகமித்திரன் - தண்ணீர்

எத்தனை எளிமையான எழுத்து நான் உங்களை விட அதி மேதாவி நான் எழுத்தாளன் என்று ஒரு இடத்தில் கூட குழப்பமான அறிவாளி தனமான வரி என்று நாவல் முழுக்க ஒரு இடத்தில் கூட கான இயலவில்லை. அதே அளவுக்கு சற்று குறையாத அளவுக்கு மனித மனதின் ஆழத்தை ஊடருத்து கண் முன் வைக்கிறார், வாழ்க்கை இத்தனை கொடுமையானதாக இருந்தாலும் ஏன் வாழ வேண்டும் என்று எளிமையாக சிந்திக்க வைக்கிறார். சென்னையில் தனியாக வசிக்கும் ஜமுனா, சாயா என்ற இரு பெண்களின்  வாழ்க்கை வழியாக நாவலில் பயணம் தொடர்கிறது. தொடர்வண்டி போல மெதுவாக தொடங்கி பின் வேகம் கூடிகொண்டே போகிறது அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணிக்க வேண்டியது வாசகனின் கடமை. சென்னையில் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தண்ணீர் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமான ஒரு என்று சொல்கிறது நாவல், கதை கலம் 1980 என்று வைத்து கொள்ளலாம் குழந்தைகள் கழிவறையில் மலம் கழித்தால் தண்ணீர் வேண்டும் என்று தெருவில் குழந்தைகள் மலம் கழிக்கிறார்கள் அதை பல்லம் தோண்ட வரும் கார்ப்பரேஷன் கார்கள் தெருவில் குழி தோண்டி போட்டு விடுவதால் அந்த பகுதியில் எந்த வாகனமும் சரியா போக முடியாது, அவர்கள் தோண்டும் குழியால் சாக்கடை தண்ணீர், குடி தண்ணீர் ஒன்றாகிவிடுவது சென்னையில் சாதாரண ஒன்றாக இன்று இருக்கிறது. பின்பு டான்க் வைத்து லாரி மூலம் தண்ணீர் விடுவார்கள் லாரிக்கு 300 என்று அந்த லாரி டிரைவர் அந்த எளிய மக்களிடம் சுடண்டுகிறான். அந்த காலத்தில் 300 ரூ என்றால் எவ்வளவு பெரிய தொகை அதே தான் இன்று பெரிய தொழிலாக வளர்ந்து நிற்கிறது.
ஜமுனாவை பாஸ்கர ராவ் என்பவன் சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி கூட்டி போய் ஆந்திர மாநில தடியர்கள் முன் நிர்வாணமாக ஓட வைக்கிறான் பிறகு ஒரு பிள்ளையும் கொடுத்து விடுகிறான் இந்த உறவு பிடிக்காத சாயா ஹாஸ்டலில் தங்க போய்விடுகிறாள் ஜமுனாவை தனிமை வாட்ட தற்கொலைக்கு முடிவு செய்கிறாள் இதை வீட்டு ஓனர் பார்த்து விட்டு வீட்டை காலி செய்யசொல்லி தொல்லை. சாதாரண பெண்ணக வந்து போகும் டீச்சரம்ம ஒரு இடத்தில் வெடிக்கிறாள் அந்த வெடிப்பில் வாழ்கையை எதிர்கொள்ளும் சக்தியை ஜமுனா பெறுகிறாள் இது நாவளின் முக்கியமான இடம். பெண்ணா பொறந்துட்டு அழலாமோடி? என்று கேட்கும் டீச்சரம்மவின் கேள்வில் எத்தனை துயரங்கள் மறைத்து கிடக்கிறது. இலாதவனின் காமம் எத்தனை வெறி கொண்டு வெளிப்பட்டு வலிப்பாக டீச்சரம்மவின் கணவனுக்கு வருகிறது என்பதை சொல்லும் இடம் அற்புதம். அதோ இரண்டு குழந்தைகள் தூக்க முடியாமல் தண்ணீர் குடத்தை தூக்கி கொண்டு போகிறதே அந்த தண்ணீர் அந்த குழந்தைக்க? இல்லை யாரோ அவர்களை செய்ய வைத்து இருக்கிறார்கள் வாழ்கையில் யாருக்கு தான் கஷ்டம் இல்லை? அதற்காக அந்த குழந்தைகள் என்ன சாகிறேன் என்றா போகிறது?. டீச்சரம்மா விடம் இருந்து வாழ்தலுக்கான உந்துதல் ஜமுனாவிற்கு கிடைக்கிறது, வாசகனுக்கும் தான். ஜமுனா உன் குழந்தைக்கு அப்பா வேண்டாமா, நாளை ஊரார்க்கு எப்படி பதில் சொல்வது என்று சாயா கேட்கிறாள், ஜமுனா எதற்கு அப்பா நமக்கு எல்லாம் அப்பா இருந்தாரா என்ன? என்று சர்வசாதாரணமாக கேட்கிறாள்,நாளை தானே உலகம் கேள்வி கேட்கும் நாளை பதில் சொல்லிகிறேன் இன்று ஏன் கவலை பட வேண்டும்? என்று சொல்கிறாள். ஆமாம் அந்த இரண்டு பெண்களுக்கு என்ன ஆயிற்று ஏன் தன்னம்தனியாக இருகிறார்கள், ஏன் என்ற கேள்விக்கு எல்லாம் வாசகர்கள் விடை கண்டுகொள்க வேண்டும். இருவரும் சமைக்காமல் வெளியே கிளம்பும் போது 'பாவம் புது குக்கர்' ஏமாந்து போகும் என்று சொல்கிறாள். அவளை நினைத்து நாம் எல்லோரும் வருத்த படுகிறற்கள் ஆனால் அவள் உயிரற்ற குக்கருக்கு கவலை படுகிறாள். இப்படி பட்ட பெண்களை தான் இந்த சமுகம் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி வருகிறார்கள், மென்மையான பெண்களை சமுகம் வெறும் காமப் பொருளாக மட்டுமே நடத்துகிறது. எதன் பொருட்டு ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய முன் வருகிரான்? என்ற கேள்வியை எழுத்தாளர் நம் முன் வைக்கிறார், ஆமாம் அதன் அடி ஆழத்தில் இருப்பது காமம் தான் அது தான் அவனை தூண்டுகிறது.
சில இடங்களில் பிராமணர்கள் மீதான ஒடுக்கு முறையை தொட்டு செல்கிறது.
 பாஸ்கர் ராவ் கார் சேற்றில் மாட்டி கொள்கிறது
"இடது பக்க இரண்டு சக்கரம் சேற்றில் சிக்கியது, சாயா ஜமுனாவின் கையை பிடித்தாள் ''

என்று கதை முடிகிறது இந்த குறியீடு எதை குறிக்கிறது என்று சிந்தித்தால் வாசகனின் வாசிப்பு பூர்த்தி அடையும். அசோகமித்ரன் படைப்பில் தண்ணீர் குறிப்பிடத்தக்கது.