Sunday, November 6, 2016

இராஜேந்திர சோழன் முத்திரை

இந்த இராஜமுத்திரையின் விளிம்பைச் சுற்றிலும் வட்டவடிவிலான அக்கால கிரந்த சமஸ்கிருத எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இதன் துவக்க எழுத்து முத்திரையின் வெண்கொற்றக்குடைக்கு நேராக ஆரம்பிக்கிறது.

இந்த இராஜமுத்திரையில் உள்ள வாசகம் பின்வருமாறு உள்ள..,

ராஜத்ராஜந்ய மகுடஸ்ரேணி

ரத்னேஷீ ஸாஸனம் !

ஏதத் ராஜேந்த்ர  சோளஸ்ய

பரகேஸரி வர்மண ஹா!!

இதன்  அர்த்தம்:

இந்த சாசனம் ‘’மன்னனுக்கெல்லாம் மன்னாக விளங்க கூடியவனாகிய  மணிமகுடத்தில் விளங்கி ஒளிவீசும் இரத்தினத்தைப்போன்றது.

இது பரகேசரி வர்மனாகிய இராஜேந்திர சோழனுடையது’’ என்பதாகும்.

பிறகு.., இம்முத்திரை நன்கு கவனிக்க வேண்டும். இதன் உச்சியில் வெண்கொற்றக்கொடையும் அதன் இருபுறமும் வெண்சாமரை என்னும் கவரியுமுள்ளது.

அதனையடுத்து வரிசையாக ஒரு கோட்டின் மேல் அமைக்கபட்டுள்ளவை தண்டு ,உடைவாள்,இருபுறமும்  குத்துவிளக்குகள்,பின் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சோழர்களின் சின்னமான புலி . இதுக்கு எதிரில் இருப்பது இரண்டு மீன்கள் பாண்டியர்களின் சின்னமாகும். இவையனைத்தும் வரிசையாக உள்ள கோட்டுக்கு கீழே தலைகீழாக அரைக்கோள வடிவில் சேரர்களின் வில் சின்னம் பொறிக்கப்பட்டு அதில்  5 உருவங்கள் பன்றி சாளுக்கியர்களின் சின்னம் , ஸ்வஸ்திக்-நண்டு , தாமரை , மத்தாளம் ,கண்ணாடி  இடம் பெற்றிருக்கும்.

இந்த இராஜமுத்திரையிலிருந்து பார் முழுதும் தனியாணை செலுத்திய இராஜேந்திரனின் தனிதன்மையை அறிந்துகொள்ளலாம்