Friday, August 5, 2016

குறுந்தொகை காதல்

கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

விளக்கம் :

மலை நாட்டில் இருக்கும் குரங்கு, கருமையான கண்களை உடைய குரங்கு. 
பாறைக்கு பாறை தாவும் போது கிழே விழுந்து ஆண் குரங்கு இறந்து போனது. 
காதலன் பிரிவு தாங்காத பெண் குரங்கு, 
தன் குழந்தையை மற்ற குங்கிடம் ஒப்படைத்து விட்டு அதே பாறை மீது ஏறி விழுந்து செத்து போயிற்று. 
நீ என்னை பார்க்க இரவில் வருவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, 
உனக்கு ஏதாவது ஆபத்து என்றால் நானும் அந்த குரங்கு போலத்தான் செய்து கொள்வேன்,
எனவே ஆபத்தான இரவில் என்னை பார்க்க வராதே.. 
என்று தலைவி தான் காதலனுக்கு சொன்னால்..