Monday, May 4, 2015

வீரப்பன் வழக்கில் வள்ளி

மேட்டூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த வள்ளி மற்றும் அவரது கணவரும் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது கைது செய்யப்பட்டார்கள் .
அந்த பெண்ணின் கண் எதிரிலேயே அவர் கணவனை சுட்டு கொன்றது அதிரடி படை, அந்த பெண்ணை மாதேஸ்வர் அதிரடி படை முகாமில் வைத்து 2 ஆண்டுகள் சித்திரவதை  செய்தார்கள் ,
நாள் தோறும் பாலியல் வன்கொடுமைகள் , ஒவ்வொரு நாளும் அந்த பெண்ணை பலர் சீரழித்தனர் . அந்த முகாமில் இருந்த அத்தனை பேரும் இதற்கு சாட்சி .
பின் வள்ளி மீது தடா சட்டம் போட்டு 10 ஆண்டுகள் சிறையில் போட்டார்கள் , 10 ஆண்டுகள் கழித்து வெளியே வந்து ஆசையோடு தன் குழந்தையை பார்க்க சென்றார் , ஆனால் அவரது மாமியார் 'நீ எவன் எவன் கூடவோ படுத்து இருக்க , கண்ட கண்ட சாதிகாரன் எல்லாம் உன்னை கற்பழித்து இருக்கான் ' என்று சொல்லி விரட்டி அடித்து விட்டார் ,
வள்ளியின் அம்மா வீட்டிலும் இதே நிலை தான் .
அனாதையாகி தனியாக ஒரு வீடு எடுத்து தங்கினாள் வள்ளி . பிறகு அடையாளம் தெரியாத எவனோ ஒருவனால் பாலியல் வன்கொடுக்கு ஆளாகி , கை-கால்கள் உடைக்க பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டு இறந்தாள் ,
வாழ்நாள் முழுவதும் பல ஆண்களின் பாலியல் கொடுமைக்கு இரையாகி கடைசியில் அதற்கே பலியாகி போனாள் வள்ளி எந்த குற்றம் செய்யாமலே .

இதேபோல் ஆயிரம் ஆயிரம் கதைகள் இந்த கேடுகேட்ட இந்திய தேசத்தில் இருக்கிறது , இதை போன்ற கொடுமைகள் எல்லாம் ஒரு நாட்டின் மீது படையெடுத்து போகும் இராணுவம் செய்வதாக தான் வரலாற்றில் இருக்கிறது .ஆனால் இந்த நாட்டில் தான் ,தன் நாடு சொந்த மக்களையே பாலியல் கொடுமை செய்யும் இராணுவமும் , காவல் துறையும் இருக்கிறது.