Saturday, January 17, 2015

ஏர் மாடு

ஏர் மாடு :

மாடு கட்டி ஏர் பூட்டிய
காலம் போச்சே
இயந்திரம் தான் ஏர்
பூட்ட வந்துருச்சே,

அடிச்சாலும் புடிச்சாலும்
அது தான் என் முச்சு
ஆளிள்ளா நேரத்துல அதுகூடதான்
எனக்கு பேச்சு ,

உன் வயிறு நிறையாமா
என் வயிறு நிறைந்தில்ல
உனக்கு ஒன்னு ஆனதுனா
என் உருசு தூங்குதில்ல,

மந்தையில உன்ன கொண்டு வித்துபுட்டேன்
என் மனசாட்சிய கொன்னு
எங்கோ புதச்சிபுட்டேன்,

கட்டுதரி இடம் பாத்து
காத்து இருக்கேன்
அந்த காலத்த நெனச்சி
தான் வாழ்ந்திருக்கேன் .

#தமிழ்நேயன் ஏழுமலை