Friday, September 5, 2014

மறந்த மாகா தலைவர்

இன்றைக்கு ஆசிரியர் தினம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறவேளையில்
 நாம் மறந்துபோன ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.
வெள்ளையனின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக கப்பல்விட்டு மண்ணின் 
மானத்தை காத்த நம் பாட்டன் வ.உ.சி.யின் பிறந்த நாள் இன்று. பிறப்பால் 
பெரும் செல்வந்தரான வ.உ.சி. இதனால் சிறைப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் துன்பப்பட்டார். சிறையில் மாடுகூட இழுக்கச் செருமுகிற செக்கை இழுத்தார். கடைசியில் கடனாளியாகி வாங்கி கடனை திருப்பிச்செலுத்த முடியாது, கடன் தொகையை எழுதிவைத்துவிட்டு மன உளைச்சலோடும், வேதனையோடும்
 செத்தார். இன்றைக்கு அவரது பேத்தி கல்விக்கடன் கேட்டு நிற்கிறார்.
# நம் பாட்டனின் தியாகத்தையும், ஈகத்தையும் இந்தியா வேண்டுமானால்
 மறக்கலாம். அவரது வாரிசுகள் நாமுமா?