Saturday, March 8, 2014

ஆங் ஸான் . சூசி்

◆ 1945 ஜூன் 19...பர்மா என்கிற மியான்மரின் தேசத்தந்தையும் சுதந்திரப் போராட்டத் தலைவருமான ஆங் ஸான் - தா கின் கீயின் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் சூ சி (கிuஸீரீ ஷிணீஸீ ஷிuவீ ளீஹ்வீ).அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில்இருந்தது மியான்மர். நாடு முழுவதும் சுதந்திரத்துக்கானபோராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தலைமை தாங்கிப் போராடிக் கொண்டிருந்தார் ஆங் ஸான். 1947ல் இடைக்கால அரசாங்கத்துக்குநடைபெற்ற தேர்தலில் அவருடைய கட்சி வெற்றி பெற்றது. இதனால் வெறுப்படைந்த சதிகாரர்கள், கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஆங் ஸானையும் கட்சியின் முக்கியத் தலைவர் களையும் சுட்டுக் கொன்றார்கள
்.◆ 1948 ஜனவரி 4...மியான்மர் விடுதலை பெற்றது. அரசாங்கத்தில் சமூக நலத் திட்ட இயக்குனராகப் பணியாற்றினார் சூ சியின் அம்மா. குழந்தைகளுக்குத் தங்கள் நாட்டைப் பற்றியும் கணவரின் போராட்டங்கள் பற்றியும் அடிக்கடிச் சொல்லி வளர்த்தார்.சூ சிக்கு 16 வயதானபோது அவருடைய அம்மா இந்தியாவுக்கான மியான்மரின் தூதராக டெல்லிக்கு அனுப்பப்பட்டார். டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளை முடித்தார் சூ சி. இந்தியாவில் இருந்த காலங்களில் அவர் மகாத்மா காந்தி யின் தத்துவங்களின் மீது அதிகம் ஈர்க்கப்பட்டார். அஹிம்சையே சிறந்த ஆயுதம் என்பதை உணர்ந்துகொண்டார். மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்பட்டங்களை முடித்தார்.அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஏரிஸ் அறிமுகமானார். அவர் திபெத்திய கலாசாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தார். இருவரும் அரசியல், பொருளாதாரம் குறித்து நிறைய விவாதிப்பார்கள். கடிதம் எழுதிக்கொள்வார்கள். நாளடைவில் நட்பு அடுத்த பரிமாணத்தை அடைந்து, காதலாக மாறியது. பிறகு, ஐ.நா. சபையில் உதவி செயலாளர் பணி சூ சிக்குக்கிடைத்தது

.◆ 1972... சூ சிக்கும் ஏரிஸுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது. அலெக்சாண்டர், கிம் என்று இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் சூ சி. தன் தந்தை ஆங் ஸானின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். அந்த ஆராய்ச்சியின் போதுதான் தன் நாட்டு மக்கள் படும் துயரத்தை முழுவதுமாக உணர்ந்தார் சூ சி.மிகத் தொலைதூரத்தில் இருந்துகொண்டு ஆராய்ச்சி, குடும்பம் என்று வாழ்ந்துகொண்டிருந்தாலும், தன் தாய் நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் சூழ்நிலைகளையும்கவனித்து வந்தார் சூ சி. ராணுவ ஆட்சியில் மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்திருந்தது.எங்கும் பசி. வறுமை. வேலையில்லாத் திண்டாட்டம். ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன.போராடி பெற்ற சுதந்திரத்தை ராணுவ ஆட்சி சீரழித்து விட்டதை சூ சியால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தன் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது தன்னால் அமைதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்பதை கணவருக்குப் புரிய வைத்தார் சூ சி. மனைவிக்கு தன்னுடைய முழுச் சம்மதத்தையும் அளித்தார் ஏரிஸ்.விரைவில் சூ சியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது.மியான்மருக்குச்சென்றார் சூ சி. அப்போது நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது.தினமும் மக்கள் சூ சியின் வீட்டுக்கு வந்து தங்களுடைய குறைகளைச் சொல்லி அழுவார்கள். சூழல் மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த சூ சி, உடனே போராட்டத்தில் இறங்க முடிவு செய்தார

்.◆ 1988... மிக முக்கியமான காலகட்டம். ஜனநாயகம் மலர வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மக்களும் களமிறங்கினர். ராணுவம் அனுப்பிய ஆயுதப்படை 2 ஆயிரம் மாணவர்களைக் கொன்று குவித்தது. இந்தச் செய்தி பரவியதும் மக்கள் கொதித்துப் போனார்கள். மாணவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், புத்த பிட்சுகள், தொழிலாளர்கள் என்று பல தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர். எங்கு திரும்பினாலும் ஆர்ப்பாட்டம்...ரத்த வெள்ளம். வேறு வழியின்றி ராணுவ ஆட்சி, இடைக்கால அரசு அமைய ஒப்புக்கொண்டது.இடைக்கால அரசாங்கத்தால் நாட்டில் ஏற்பட்ட எழுச்சியைக் கண்ட ராணுவம், மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக அறிவித்தது. ழிணீtவீஷீஸீணீறீலிமீணீரீuமீ யீஷீக்ஷீ ஞிமீனீஷீநீக்ஷீணீநீஹ் என்ற கட்சியை தொடங்கினார் சூ சி. உலகின் பல்வேறு அமைப்புகளுக்கு விரிவாகக் கடிதம் எழுதினார். உலக நாடுகளுக்கு இந்தச் செய்திகளைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாடு முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசினார். அரசாங்கம் அவருடைய கூட்டங்களுக்குத் தடை விதித்திருந்த போதிலும் மக்கள் தடையை மீறி கலந்து கொண்டனர்.ராணுவக் கெடுபிடிகள் அதிகரித்தன. சூ சிகட்சியினர் சிறையில் அடைக்கப்பட்டனர். சூ சியின் மீது கேவலமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். அவரைக் கொல்வதற்கு ஆட்களை அனுப்பினர். எதைக் கண்டும் சூ சி பயப்படவில்லை. இதற்கிடையில் அவருடைய அம்மாவும் இறந்து போனார

்.◆ 1988 ஜூலை 19...தியாகிகள் தினம் அனுஷ்டிக்க முடிவு செய்தார் சூ சி. எரிச்சல் அடைந்த ராணுவ அரசு அன்றைய தினத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

◆ 1988 ஜூலை 20...ஓர் ஆண்டு வீட்டுக் காவலில் சூசி வைக்கப்பட்டார்.அவருடைய கட்சியைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். தன்னுடைய ஆதரவாளர்கள் எப்படிச் சிறையில் நடத்தப்படுகிறார்களோ அதே போலத் தானும் நடத்தப்பட வேண்டும் என்றார் சூ சி. ராணுவ அரசாங்கம் செவி சாய்க்காததை அடுத்து, உண்ணாவிரதம் இருந்தார்.செய்தி கேட்டு ஏரிஸும் குழந்தைகளும் சூ சியைக் காண விரைந்து வந்தனர். அதுதான் சூ சி தன் குடும்பத்துடன் இருந்த கடைசித் தருணங்கள். 12 நாட்களுக்குப் பிறகு, அவருடைய ஆதரவாளர்கள் மீது சட்டப்படி மட்டுமே விசாரணை நடத்தப்படும்என்று அரசாங்கம் உறுதியளித்ததைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தைக்கைவிட்டார் சூ சி.விடுமுறை முடிந்தது. ஏரிஸுக்கும் குழந்தைகளுக்கும் சூ சியை விட்டுச் செல்ல மனமில்லை. ஆனால், தன் மனைவி சாதாரண மனுஷி இல்லை என்பதை உணர்ந்திருந்த ஏரிஸ் குழந்தைகளுடன் கிளம்பினார். இங்கிலாந்து சென்று இறங்கியதும்தான்மியான்மர் ராணுவ அரசாங்கத்தின் இன்னொரு கோர முகம் தெரிந்தது. குழந்தைகள் இருவரின் மியான்மர் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஏரிஸ் மட்டும் சூ சியைப் பார்க்க வந்தார். அதற்குப் பிறகு அவரையும் அனுமதிக்கவில்லை.உலக நாடுகளின் கவனம் மியான்மரின் மீது விழுந்தது.பல்வேறு நாடுகள், தலைவர்கள் சூசியை விடுதலை செய்யச் சொல்லி வலியுறுத்தினர்.‘சூ சியை விடுதலை செய்கிறோம். ஆனால், அவர் நாட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்றது ராணுவம்.‘முறைப்படி தேர்தல் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் அதிகாரத்தை வழங்க ஒப்புக்கொண்டால்நான் வெளியேறுகிறேன்’என்றார் சூ சி.மக்களிடம் அதிருப்தி... உலக நாடுகளிட மிருந்து எதிர்ப்பு... இறுதியில் தேர்தல் நடத்துவதாக அறிவித்தது ராணுவ அரசாங்கம். மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். தேர்தல் வேலைகள் ஆரம்பித்தன. வேட்பாளர் பட்டியலில் மிகக் கவனமாக சூ சியின் பெயரைச் சேர்க்கவிடாமல் பார்த்துக்கொண்டது அரசு.தேர்தல் வந்தது. சூ சியின் கட்சி பெரும்பான்மையானஇடங்களை வென்றது. 485 இடங்களில் 392 இடங்களை சூ சி கட்சி பெற்றிருந்ததைக்கண்டு அரண்டு போனார்கள் ராணுவ ஆட்சியாளர்கள். அவர்களால் ஓர் இடத்தைக் கூடப் பெற முடியவில்லை. மீண்டும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அறிவித்தது. எதிர்க்கட்சிகள்தடை செய்யப்பட்டன. உலக நாடுகளின் கண்டனம், ஐ.நா.வின் வேண்டுகோள் என எதற்கும் ராணுவ அரசாங்கம் அசைந்து கொடுக்கவில்லை.

◆ 1991...ஜனநாயகம், மனித உரிமை போராட்டங்களுக்காக அமைதி நோபல் பரிசு சூ சிக்கு வழங்கப்பட்டது. அதைப் பெறுவதற்குக் கூட ராணுவம் அனுமதிக்கவில்லை. சூ சியின் மகன்களே பரிசைப் பெற்றுக்கொண்டார்கள். பரிசுத் தொகை முழுவதையும் மியான்மர் மக்களின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்குச் செலவிடுமாறு அளித்துவிட்டார்சூ சி. அதன் பிறகு, மகாத்மா காந்தி விருது உள்பட, உலகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களும் அரசாங்கங்களும் ஏராளமான விருதுகளைஅறிவித்து சூ சிக்கு பெருமை சேர்த்தன.

◆ 1996...வீட்டுக்காவலில்இருந்து விடுவிக்கப்பட்டசூ சி, காரில்பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கார் ஓட்டுநரின் உதவியால் உயிர் தப்பினார் சூ சி. மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.பொதுவாழ்க்கைஇப்படிப் போய்க்கொண்டிருந்தபோது, சொந்த வாழ்க்கையிலும் மிகத் துயரமான செய்தி சூ சியை வந்தடைந்தது. ஏரிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மனம் உடைந்து போனார் சூ சி. அவர் இங்கிலாந்து செல்ல ராணுவ அரசாங்கம் அனுமதித்தது. போய்ப் பார்க்கலாம் என்று தோன்றினாலும், அடுத்த கணமே அந்த உண்மை உறைத்தது. தான் வெளியேறினால், தன்னை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்காது ராணுவ அரசாங்கம் என்பதை உணர்ந்தார். எனவே, மிகுந்த மனக்கஷ்டத்துடன்அந்த அனுமதியை நிராகரித்தார்.ஏரிஸ் வருவதற்கு முயற்சி செய்தார். ஆனால், அவரை இங்கு வைத்துப் பராமரிக்க முடியாது என்று காரணம் சொல்லி, அனுமதி மறுத்தது ராணுவ அரசாங்கம். அன்பு மனைவியைப் பார்க்காமலே, 1999ம் ஆண்டு 53 வயதில் இறந்துபோனார் ஏரிஸ்.

◆ 2002...உலக நாடுகளின் அழுத்தம், ஐ.நா.வின் வற்புறுத்தலால் விடுவிக்கப்பட்டார் சூ சி. ஆனால், அடுத்த ஆண்டே மீண்டும் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். அவருடைய மகன்களைப் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. பேரக் குழந்தைகளைப் பார்த்தது கூட இல்லை. ஒன்றிரண்டு உதவியாளர்களுடன்வீட்டுக்குள்ளேயே இருந்து வந்தார். தொலைபேசியில் பேச அனுமதி இல்லை. செய்திகளைப் படிக்க முடியாது. யாரையும் பார்க்க அனுமதியில்லை. மிகக் கடுமையான காலங்கள்

.◆ 2010 நவம்பர் 13...உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த தண்டனைக் காலம் முடிந்தது. சூ சி விடுதலை செய்யப்பட்டார்.68 வயதாகும் சூ சி, தன்னுடைய வாழ்நாளில் 15 ஆண்டுகளை வீட்டுக் காவலில் கழித்திருக்கிறார்... இன்றும் அவருடைய போராட்டம் தொடர்கிறது. உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் அறப் போராட்டங்களின் மீது நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார் சூ சி!